உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள்

சேதமடைந்த 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுற்றியுள்ள நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் பல மோசமான நிலையில் இருந்தன. இந்த ஏரிகள், கரைகள் சேதமாகியும், கலங்கல், மதகு போன்றவை சீரமைக்க வேண்டிய தேவை இருந்தது.எனவே, காஞ்சிபுரம் சுற்றியுள்ள 17 ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஏரிகளுக்கு தேவையான சீரமைப்பு பணிகளை நீர்வளத் துறை கடந்தாண்டு துவக்கியது.கரையை பலப்படுத்துவது, கலங்கல், மதகு சீரமைப்பது, வரத்து கால்வாயை துார்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இதற்காக, நீர்வளத் துறை 11.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிட்டுள்ளது.இந்த 17 ஏரிகளில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்ததாகவும், அலைக்கற்கள் பதிப்பது உள்ளிட்ட சிறிய பணிகள் மட்டும் பாக்கி இருப்பதாகவும், அவை இம்மாதம் நிறைவு பெறும் என, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீரமைக்கப்பட்டு வரும் 17 ஏரிகள்

தாமல் மாந்தாங்கல், தாமல் சக்கரவர்த்தி தாங்கல், தாமல் பெரிய ஏரி, கிளார், முசரவாக்கம் கொடுவா, திருப்புக்குழி மாந்தாஙகல், திருப்புட்குழி, முசரவாக்கம், விஷார், மேல் ஒட்டிவாக்கம், கீழம்பி, மேல்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், சிறுகாவேரிப்பாக்கம், செவிலிமேடு, தேனம்பாக்கம் மற்றும் வில்லிவலம் ஏரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை