உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மூச்சு குழாயில் சிக்கிய பர்தா ஊசி அகற்றம்

மூச்சு குழாயில் சிக்கிய பர்தா ஊசி அகற்றம்

சென்னை:இளம்பெண்ணின் மூச்சுக் குழாயில் சிக்கிய பர்தா ஊசியை, நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை பயன்படுத்தி டாக்டர்கள் அகற்றினர்.இதுகுறித்து, அம்மருத்துவமனையினன் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் விவேகானந்தன் கூறியதாவது:சென்னையை சேர்ந்த 20 வயது இளம்பெண் தற்செயலாக பர்தா ஊசியை விழுங்கி அவதிப்பட்டார். அந்த ஊசி, மூச்சுக் குழாயில் சிக்கி சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மூச்சுக் குழாயில், வீக்கம், புண்கள் உருவாகும் சூழல் இருந்தது.எனவே, 'ப்ரான்கோஸ்கோப்' என்ற நவீன கருவியை பயன்படுத்தி, மூச்சு குழாய் வழியாக கருவி செலுத்தி, அங்கு சிக்கியிருந்த பர்தா ஊசியை அகற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை