மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
6 hour(s) ago
உத்திரமேரூர் : உத்திரமேரூர்ஒன்றியம், கட்டியம்பந்தலைச் சுற்றி, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ., துாரத்தில் உள்ளஉத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனை அல்லது 15 கி.மீ.,துாரத்தில் உள்ள மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிஉள்ளது.இதனால்,நோய்வாய்ப்படும் நேரங்களில் உடனடிமருத்துவ வசதிகிடைக்காமல்,நோயாளிகள்சிரமத்துக்குஉள்ளாகின்றனர்.வசிப்பிடத்திற்கு அருகே மருத்துவமனை இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக,கர்ப்பிணியர் பிரசவகாலத்தில், உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலை உள்ளது.எனவே, இக்கிராமங்களுக்கு மத்தியில் உள்ள கட்டியம்பந்தல்கிராமத்தை மையமாக கொண்டு, அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஏற்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
6 hour(s) ago