| ADDED : மே 28, 2024 03:28 AM
ஸ்ரீபெரும்புதார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 60; வாட்டர் சப்ளை தொழில் செய்து வருகிறார்.இவர், இம் மாதம் 19ம் தேதி, ஸ்ரீபெரும்புதுாரில் பஜாரில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருத்த, மனைவியின் ஏழரை சவரன் தங்க நகையை, 2 லட்சம் ரூபாய் செலுத்தி மீட்டார்.பின்னர், ஏழரை சவரன் தங்க நகை மற்றும் 47,000 ரூபாய் பணத்தை, 'டி.வி.எஸ்.,' இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் வைத்து பூட்டி, வங்கியின் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்.திரும்பிவந்து பார்த்த போது, டூ- - வீலரின் இருக்கையின் பூட்டை உடைத்து, அதிலிருந்த ஏழரை சவரன் தங்க நகை மற்றும் 47,000 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகை திருட்டில் ஈடுபட்ட, சென்னை கொளத்துார் கண்ணகி நகரைச் சேர்ந்த பிரதீப், 41, பெரம்பூரைச் சேர்ந்த ஜீவன், 45, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.