உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜல்லி குவியலால் விபத்து அபாயம்; குன்றத்துார் சாலையில் திக்... திக்

ஜல்லி குவியலால் விபத்து அபாயம்; குன்றத்துார் சாலையில் திக்... திக்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் வழியாக, குன்றத்துார் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இச்சாலையில் பிள்ளைப்பாக்கம்சிப்காட் அருகே, சாலையோரம் ஜல்லிக்கற்கள் சிதறி குவியலாக கிடக்கிறது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள ஜல்லியின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விபத்தில் சிக்கி காயமடைந்துவருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், சாலையில் தேங்கியுள்ள ஜல்லிக் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை