உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் பணிக்காக சாலையோரம் பள்ளம்

குடிநீர் பணிக்காக சாலையோரம் பள்ளம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள கைலாசநாதர் கோவில் அருகில், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக இரு வாரங்களுக்கு முன் மாநகராட்சி குடிநீர் பிரிவு சார்பில், பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும், குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை முடிக்காததால், பள்ளத்தை மூடாமல் உள்ளனர்.இதனால், கைலாசநாதர் கோவிலுக்கு வந்து செல்லும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, இச்சாலை வழியாக புத்தேரி, பாக்குபேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே, கைலாசநாதர் கோவில் அருகில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில், குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து, பள்ளத்தை முறையாக மூடி சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை