உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூரை இல்லாத தபால் நிலையம் வாடிக்கையாளர்கள் கடும் அவதி

கூரை இல்லாத தபால் நிலையம் வாடிக்கையாளர்கள் கடும் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சியில் தபால் நிலையம் உள்ளது. இங்கு பண்ருட்டி, ஏலக்காய்மங்கலம், கண்டிகை, வேம்பாக்கம், குன்னவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.மேலும், சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்த, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் எடுக்க, கர்ப்பிணியருக்கான நிதியுதவி தொகை பெறுவதற்காக என, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், தபால் நிலையத்தின் வெளியில் கூரை வசதி இல்லை. இதனால், கவுன்டரில் பணம் செலுத்த மற்றும் எடுக்க கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.தற்போது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வரும் சூழலில், தபால் நிலையம் வரும் பெண்கள் மற்றும் வயதானோர் சுட்டெரிக்கும் வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தபால் நிலைய கவுன்டரில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை