உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் நுாக்கலம்மனுக்கு வரும் 9ல் சங்காபிஷேகம்

உத்திரமேரூர் நுாக்கலம்மனுக்கு வரும் 9ல் சங்காபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர், எல்.எண்டத்துார் சாலையில் நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்று நிலைகளுடன் புதிதாக ராஜகோபுரம், 27 நட்சத்திரங்கள் மற்றும் நவக்கிரஹ ராசி மண்டலம் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்., 21ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையசாக நடந்தது.தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதில், நிறைவு நாளான ஜூன் 9ம் தேதி மண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் 108 சங்காபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு மங்கல வாத்தியம், ராஜமேளம் முழங்க நுாக்கலம்மன் வீதியுலா நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி ரமேஷ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை