உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விடுமுறை நாட்களிலும் வேலை பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

விடுமுறை நாட்களிலும் வேலை பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

காஞ்சிபுரம்:நாடு முழுதும், 18வது லோக்சபா தேர்தல் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.அதன்படி, தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தேர்தல் பணிகள் மற்றும் தேர்வு பணிகளை செய்து வருகின்றனர்.இதுதவிர, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த விடுமுறை நாட்களிலும், திட்டம் சார்ந்த பணிகளை நிறைவேற்ற வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், குறுந்தகவல் வாயிலாக விடுமுறை நாட்களில் பணிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது, தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஏற்கனவே, அரசு ஊழியர்கள் ஓட்டு ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் என, வெளிப்படையாக கூறியுள்ளனர்.ஏற்கனவே அதிருப்தியில் உள்ள ஆசிரியர்கள், இந்த குறுந்தகவலால், தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவதற்கு வாய்ப்பு உருவாக்கும் சூழல் உள்ளது என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்