உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடியின மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்

பழங்குடியின மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்

காஞ்சிபுரம்:'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின்கீழ், 80 பழங்குடி மாணவியருக்கு, 30 நாட்கள் தற்காப்பு பயிற்சி துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, 80 மாணவியருக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் நேற்று துவக்கப்பட்டன.அடுத்த மாதம் 10ம் தேதி வரை, 30 நாட்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில், பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஆகிய விழிப்புணர்வு குறும் பட தொகுப்பினை ஒளிபரப்பினர்.காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி, சிறுவர் உதவி மைய உறுப்பினர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுசிலா, ஓரிக்கை ஆதிதிராவடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி மற்றும் ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ