உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

காஞ்சிபுரம், : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காஞ்சிபுரம் கிளை சார்பில், காலத்தை பேசும் கவிதைகள் என்ற தலைப்பில், கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் கிளை சங்க பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காலத்தை பதிவு செய்யும் கவிஞர்கள் என்ற தலைப்பில், கவிஞர்கள் பலர் தங்களது கவிதையை வாசித்தனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநில பொதுச் செயலர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர்கள் வாசித்த, கவிதையைதிறனாய்வு செய்தார்.சங்க மாவட்ட செயலர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் ஜெயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை