உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு பாலாறு பாலம் பளிச்

செவிலிமேடு பாலாறு பாலம் பளிச்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு -- புஞ்சையரசந்தாங்கல் இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது.இப்பாலத்தின் கீழ் உள்ள நீர்வழித்தடங்களில் செடி, கொடிகள் புதர்போல மண்டி கிடந்தது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், நீர்வழித்தடங்களில் மண்டி கிடந்த புதர்கள் அகற்றப்பட்டன.இந்நிலையில், பாலத்தின் மீதுள்ள இரு தடுப்புச்சுவர்களின் மீது பூசப்பட்டிருந்த வர்ணம், பொலிவிழந்து காணப்பட்டது. இந்த பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சுவரில் மோதி விபத்தில் சிக்கும் சூழல் இருந்தது. தற்போது, நெடுஞ்சாலைத் துறை சார்பில், தடுப்புச்சுவர்களுக்கு வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை