| ADDED : ஆக 18, 2024 12:19 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம், வளர்பிறை சனி மஹா பிரதோஷத்தையொட்டி மூலவர் அகத்தீஸ்வருக்கும், மூலிகையால் உருவாக்கப்பட்ட மஹா மூலிகை நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சனி மஹா பிரதோஷத்தையொட்டி நேற்று மூலவருக்கும், நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை உக்கம்பெரும்பாக்கத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் நேற்று மாலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் கிழக்கு கரை, வீரஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.உத்திரமேரூர் அடுத்த, எடமச்சி முத்தீஸ்வரர் கோவில், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, காந்தி சாலை வன்னீஸ்வரர், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர், கருவேப்பம்பூண்டி காசிவிஸ்வநாதர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.