உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்

தென் மாநில வாலிபால் போட்டி சென்னை எஸ்.ஆர்.எம்., தங்கம்

சென்னை : தென் மாநில அளவில் ஆடவருக்கான வாலிபால் போட்டி, விருத்தாசலம் பகுதியில் கடந்த 27ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதில், எஸ்.ஆர்.எம்., - வருமான வரி, ஜி.எஸ்.டி.,- ஐ.ஓ.பி., வங்கி உட்பட ஐந்து அணிகள் 'லீக்' முறையில் மோதின.'லீக்' சுற்றில் எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 17, 25 - 21, 21 - 25, 27 - 25 என்ற கணக்கில்வருமான வரி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., அணி 30 - 28, 25 - 22, 25 - 20 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி., அணியை தோற்கடித்தது.அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது.ஐ.ஓ.பி., - வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி., அணிகள், முறையே இரண்டு முதல் நான்கு இடங்களை பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி