உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி ஓபன் வாலிபாலில் சாம்பியன்

செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி ஓபன் வாலிபாலில் சாம்பியன்

சென்னை, நொச்சி வாலிபால் கிளப் சார்பில், ஓபன் வாலிபால் போட்டியை, திருவள்ளூர் மாவட்டம், நொச்சிமேடு பகுதியில் உள்ள கிளப் மைதானத்தில் நடந்தது.போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து 65 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்ட போட்டியில், முதல் ஆட்டம் முதலே செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி அபாரமாக விளையாடியது. அரையிறுதியில், செயின்ட் ஜோசப் அணி, 27 - 25 என்ற கணக்கில் பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இறுதிப் போட்டியில், செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் ஐ.கியூ., ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில், 30 - 27 புள்ளி கணக்கில் செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. போட்டியில் முதலிடம் பிடித்த செயின்ட் ஜோசப் அணியை, அக்கல்லுாரி் நிறுவனர் பாபு மனோகரன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை