உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீரில் மூழ்கிய வைக்கோல்; விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு

நீரில் மூழ்கிய வைக்கோல்; விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பட்டத்திற்கு, 8,800 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த மே மாத துவக்கத்தில் நடவு செய்த பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயார் நிலையிலும், சில இடங்களில் அறுவடையும் முடிந்துள்ளது.அறுவடை செய்த நிலங்களில், நெல்லை மட்டும் விவசாயிகள் எடுத்துக் கொண்டு, அதில் கிடைக்கும் மாட்டுத் தீவனமான வைக்கோலை நிலத்திலேயே உலரச் செய்வர்.பின், வைக்கோல்கட்டும் இயந்திரம் வாயிலாக கட்டப்பட்டுவிற்பனை செய்யப்படும்.இந்நிலையில், அரும்புலியூர், பினாயூர், மலையாங்குளம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்,சமீபத்தில் நெல் அறுவடை செய்த நிலங்களில், நிலங்களிலேயே வைக்கோலை உலர வைத்தனர். இந்நிலையில், திடீரெனபெய்த தொடர் மழையால்,பல இடங்களில் வைக்கோல் மழை நீரில் மூழ்கி வீணாகிஉள்ளது. நெற்பயிர் சாகுபடியில் லாபத்தை நிர்ணயிப்பதில்,மாட்டுத் தீவனமான வைக் கோலுக்கும் பங்கு உண்டு என்பதால், வைக்கோலை தவறவிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ