மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
10 hour(s) ago
விவசாயிகள் தின விழா
10 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
10 hour(s) ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், அரும்புலியூர், கரும்பாக்கம் திருவானைக்கோவில், விச்சூர், மிளகர்மேனி உள்ளிட்ட பல கிராமங்கள், ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளது.இந்த கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.மேலும், இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர், செங்கல்பட்டில் உள்ள கல்வி கூடங்களில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூர் வரை இயக்கப்பட்ட தடம் எண்: 129ஏ மற்றும் 129பி ஆகிய அரசு பேருந்துகள், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், அரும்புலியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட பல தரப்பினரும் செங்கல்பட்டு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து விச்சூர் கிராம வாசிகள் கூறியதாவது:செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் வழியாக இயங்கி வந்த அரசு பேருந்து, எவ்வித அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நேரில் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூருக்கு, தினமும் காலை, மாலை என, இரு வேளையாவது அரசு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago