உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய சாப்ட் பால் போட்டி தமிழகம் மூன்றாம் இடம்

தேசிய சாப்ட் பால் போட்டி தமிழகம் மூன்றாம் இடம்

சென்னை : கர்நாடகா சாப்ட் பால் சங்கம் சார்பில், தென் மாநில அளவில் தேசிய சாப்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியை, கர்நாடகாவில் உள்ள துமகூரு நகரில் நடந்தது.தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இருபாலரிலும் தலா ஏழு மாநில அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'லீக்' முறையில் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் ஆந்திரா முதலிடத்தையும், தெலுங்கான இரண்டாம் இடத்தையும், தமிழக மூன்றாம் இடத்தையும் வென்று அசத்தின.அதேபோல், பெண்களில் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.மூன்றாம் இடத்தை பிடித்த தமிழக அணியை, தமிழ்நாடு சாப்ட் பால் சங்க தலைவர் பாலமுருகன், சென்னை சங்க தலைவர் மாலதி மற்றும் செயலர் ராஜேந்திரபிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ