உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கன்டெய்னர் மீது பைக் மோதி வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்

கன்டெய்னர் மீது பைக் மோதி வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மேவலுார் குப்பம், கிருஸ்தவ கண்டிகையை சேர்ந்தவர் ஜஸ்டின், 22; மெக்கானிக். தண்டலத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த மோசஸ், 17, என்பருடன், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், தண்டலத்தில் இருந்து வீட்டிற்கு சென்றார்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை அருகே வந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.இதில், ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசசுக்கு இடது கால் முறிந்தது. ஸ்ரீபெரும்பதுார் போலீசார் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஜஸ்டினின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்