உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரியில் மண் எடுத்த பொக்லைன் தீப்பற்றி எரிந்தது

ஏரியில் மண் எடுத்த பொக்லைன் தீப்பற்றி எரிந்தது

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பிள்ளைப்பாக்கத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கடுவஞ்சேரி, போந்துார் பகுதிகளில் இரவு நேரங்களில் மண் திருடப்பட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரோந்து சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு, மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் இரண்டு பொக்லைனை அங்கேயே விட்டுவிட்டு, லாரிகளுடன் தப்பிச் சென்றனர்.இதையடுத்து, போலீசார் திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில், இரண்டு பொக்லைன் இயந்திரங்களும் திடீரென தீப்பற்றி எரிந்தன. பொக்லைன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளிக்காததால், ஸ்ரீபெரும்புதுார் போலீசார், தீயில் எரிந்த வாகனங்கள் யாருடையது,எதற்காக எரிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ