| ADDED : ஆக 11, 2024 04:55 AM
பம்மல், : அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 29. இவர், நேற்று அதிகாலை, அனகாபுத்துார் அணுகு சாலையில் 'மாருதி வேகனார்' காரில் சென்று கொண்டிருந்தார். எச்.பி., பெட்ரோல் 'பங்க்' அருகே சென்ற போது, எதிரே வந்த 'மாருதி ஷிப்ட் டிசைர்' காரும், நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இந்த விபத்தில், வேகனார் காரில் காஸ் கசிவு ஏற்பட்டு, அதன் முன்பகுதி தீ பிடித்து எரிந்தது. அந்த சமயத்தில், பின்னால் வந்த 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனம் ஒன்றிலும் தீப்பிடித்து எரிந்தது.அவ்வழியாக சென்றவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். தீ பற்றியவுடன் வாகனங்களை ஓட்டியவர்கள், சுதாரித்து வாகனங்களை விட்டு இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.