உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 29ல் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கவுன்சிலர்களிடம் திரைமறைவு பேரம்

29ல் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கவுன்சிலர்களிடம் திரைமறைவு பேரம்

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, தி.மு.க., - -அ.தி.மு.க., - -காங்., - -சுயேச்சை என, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கமிஷனர் செந்தில்முருகனிடம், அனைத்து கட்சியை சேர்ந்த, 33 கவுன்சிலர்களும் சேர்ந்து மனு அளித்ததால், வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, கமிஷனர் செந்தில்முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடத்துவது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், கவுன்சிலர்கள் மத்தியில், திரை மறைவில் பேரம் அமோகமாக நடக்கிறது.தற்போதைய சூழலில், மாநகராட்சி நிர்வாகத்தில், மேயருடன் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 80 சதவீதம், அதாவது 41 கவுன்சிலர்கள், வரும் 29ம் தேதி மாமன்ற கூட்டத்திற்கு வந்து, ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, தீர்மானம் நிறைவேறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேயருக்கு ஆதரவு நிலைப்பாட்டில், 13 கவுன்சிலர்கள் இருப்பதால், இந்த எண்ணிக்கையை குறைக்கவும், மேயருக்கு ஆதரவு கவுன்சிலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இரு தரப்பினரும், கவுன்சிலர்களிடம் பேரம் நடத்துகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துகொள்ள கவுன்சிலர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கான பேச்சு, இரு தரப்பிலும் தொடர்ந்து நடப்பதால், கவுன்சிலர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேயர் பதவி மீதான ஓட்டெடுப்பு, ரகசிய முறையில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மேயருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஓட்டளித்த விபரத்தை யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்பதால், திரை மறைவில் பேரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி