| ADDED : மே 28, 2024 03:32 AM
ஸ்ரீபெரும்புதுார் : சென்னை, வேளச்சேரியைச் சேர்நதவர், விஜி, 34. இவருக்கு சொந்தமாக, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த நெமிலியில் வீடு உள்ளது. அவ்வப்போது இந்த வீட்டிற்கு வந்து செல்லுவது வழக்கம்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஜியின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்ததபோது, மர்ம நபர்கள் மூவர், வீட்டின் பூட்டை உடைக்க முயன்றது தெரிந்தது.இதையடுத்து, பொதுமக்கள் வருவதை கண்ட திருடர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அப்பகுதி இளைஞர்கள் திருடர்களை விடாமல் பின்னால் துரத்தி சென்றனர். தண்டலம் அருகே சென்று போது, நிலைதடுமாறி கொள்ளையர்கள் மூவரும் விழுந்தனர்.இதில், இருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். இதையடுத்து, பொதுக்கள் அவரை நையப்புடைத்து ஸ்ரீபெரும்புதுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர், சென்னையைச் சேர்ந்த ஹரிஷ், 18, என்பதும் தெரிந்தது. இதையடுத்து தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.