உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கொளுத்துகிறது கோடை வெயில் கருகி சரியும் வாழை இலைகள்

கொளுத்துகிறது கோடை வெயில் கருகி சரியும் வாழை இலைகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.5 லட்சம் ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.சில தினங்களாக பங்குனி வெயில், அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. நேற்று, மாலை 3:00 மணி நிலவரப்படி, 37 டிகிரி செல்சியஸ் என, அழைக்கப்படும், 99 பாரன்ஹீட் வெயில் அடித்து வருகிறது.இந்த வெயிலால், நெற்பயிர்கள், காய்கறி, வாழை ஆகிய பல வித பயிர்கள் கருகி வருகின்றன. குறிப்பாக, பரந்துார், திம்ம ராஜம்பேட்டை, தாங்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வாழை தோப்புகளில், இலை கருகி உள்ளன.இதனால், வாழை குலை தள்ளும் போது, அழுகிய நிலையில் இருக்கும் என, விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கோடை வெயில் இருந்து, வாழை பயிரை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ