உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துாங்கிய மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்

துாங்கிய மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்

கோயம்பேடு, : கோவிலில் துாங்கிய மாமனாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனர்.மதுரவாயல், பிள்ளையார் கோவில், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 65; லாரி ஓட்டுனர்.இவருக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல், தன் மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டிலேயே இருந்து வந்தார்.இவர் இரவில், வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் துாங்குவது வழக்கம். கடந்த மாதம் 23ம் தேதி, கோவிலில் துாங்கிய போது, இவரது தலையில் மர்ம நபர் கல்லை போட்டுள்ளார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை கோயம்பேடு போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கண்ணன் தலையில் காயம் ஏற்பட்ட நாள் முதல், அவரது மருமகன் மகேஸ்வரன், 35, என்பவர் தலைமறைவாக இருந்தது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அவரைப் பிடித்து விசாரித்ததில், மதுப்பழக்கம் உடைய மகேஸ்வரன், சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மாமனார், மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.இதை மாமனார் கண்ணன் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த மகேஸ்வரன், இரவு கோவிலில் துாங்கிய கண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிந்தது.இதையடுத்து கோயம்பேடு போலீசார், நேற்று மகேஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை