உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடலில் அடுத்தடுத்த 2 கடைகளில் திருட்டு

திருமுக்கூடலில் அடுத்தடுத்த 2 கடைகளில் திருட்டு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 47. இவர், அப்பகுதி பிள்ளையார் கோவில் எதிரே பேக்கரி கடை வைத்து உள்ளார். கடந்த 13ம் தேதி இரவு, வழக்கம்போல கடையை மூடிவிட்டு சிவகுமார் வீட்டுக்கு சென்றார்.திரும்ப நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது, கடையின் மேலே உள்ள சீட்டை உடைத்து, மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கல்லாவில் இருந்த 6,000 ரூபாய் பணம் திருடிச் சென்றது தெரிந்தது.இக்கடைக்கு அருகே, அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி என்பவர் உரம், மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடையின் பூட்டையையும் மர்ம நபர்கள் அன்று இரவு உடைத்து 5,000 ரூபாய் திருடிச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் சிவகுமார் மற்றும் நேதாஜி அளித்த புகாரின்படி, சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி