உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவானைக்காவலில் இருந்து உத்திரமேரூருக்கு நேரடி பஸ் இல்லை

திருவானைக்காவலில் இருந்து உத்திரமேரூருக்கு நேரடி பஸ் இல்லை

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில், விச்சூர், திருவானைக்கோவில், ராஜாம்பேட்டை, கரும்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளது.இந்த கிராமங்களை சேர்ந்தோர், உத்திரமேரூரில் உள்ள பி.டி.ஒ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சார் - பதிவாளர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகம் சார்ந்து உத்திரமேரூர் செல்கின்றனர்.

நேரடி போக்குவரத்து

இப்பகுதியில் இருந்து, உத்திரமேரூர் செல்ல பேருந்து வசதி இல்லாததால், 20 கி.மீ., துாரம் உள்ள செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர் செல்ல வேண்டும் என்ற நிலை நீண்ட காலமாக தொடர்கிறது.இதேபோன்று, திருமுக்கூடல் அடுத்த, அருங்குன்றம், மதூர், பட்டா, காவணிப்பாக்கம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களுக்கும் உத்திரமேரூர் செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லை.இக்கிராமங்களைச் சேர்ந்தோர், 25 கி.மீ., துாரத்தில் உள்ள காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர் செல்லும் நிலை உள்ளது.இதனால், கூடுதலான துார பயணம், அலைச்சல், நேரம் விரயம் போன்ற பல பிரச்னைகளால் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, திருவானைக்கோவில் கிராமத்தினர் கூறியதாவது:உத்திரமேரூருக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், அரசு அலுவலகங்களுக்கு காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

உரிய நடவடிக்கை

மேலும், போக்குவரத்து பிரச்னையால், உத்திரமேரூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் இப்பகுதி மாணவர்கள் சேர இயலாத நிலை உள்ளது.எனவே, இக்கிராமங்களை ஒருங்கிணைத்தபடியாக உத்திரமேரூர் வரை நேரடியாக அரசு பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை