உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எழிச்சூர் சாலையில் மின்விளக்கின்றி அவதி

எழிச்சூர் சாலையில் மின்விளக்கின்றி அவதி

ஸ்ரீபெரும்புதுார்,:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்குப்பட்டு கிராமத்தில் இருந்து, எழிச்சூர் சாலை வழியே, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த சாலை வழியே, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிக்கிச்சைக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள் இருள் சூழ்ந்த சாலையில் பயத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை