உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை அதிகார நந்தி வாகன உற்சவம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு மருகுவார்குழலி அம்பிகைக்கும், வழக்கறுத்தீஸ்வருக்கும் திருக்கல்யாணம் உற்சவம் விமரிசையாக நடந்தது.தொடர்ந்து திருமண கோலத்தில், தம்பதி சமேதராய், சுவாமியும், அம்பிகையுடன் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.நேற்று இரவு, யானை வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ