உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சங்கர மடத்தில் திருவாசகம் முற்றோதல்

காஞ்சி சங்கர மடத்தில் திருவாசகம் முற்றோதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தையொட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரஹத்துடன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருவாசகம் முற்றோதல் பேரவை, சிவ வசந்தா ஏற்பாட்டில், திருவாசக முற்றோதல் நிகழ்வு நேற்று நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகத்தில் உள்ள பாடல்களை முற்றோதல் செய்தனர். காலை 10:00 மணிக்கு துவங்கிய திருவாசகம் முற்றோதல், மாலை 4:00 மணி வரை நடந்தது.நிகழ்ச்சியில் அருளுரையாற்றிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், முற்றோதலில் பங்கேற்றவர்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ