உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரிகளிடம் மாமூல் வசூல் டிராபிக் இன்ஸ்., சஸ்பெண்ட்

லாரிகளிடம் மாமூல் வசூல் டிராபிக் இன்ஸ்., சஸ்பெண்ட்

தாம்பரம் : தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் எல்லையில் வரும் லாரி ஓட்டுனர்களிடம், போக்குவரத்து போலீசார் மாமூல் பெறுவதாக புகார் எழுந்தது.குறிப்பாக, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கிரஷர்களுக்கு செல்லும் லாரிகளிடம் போக்குவரத்து போலீசார் நடத்திய வசூல் வேட்டை வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இது குறித்து, தாம்பரம் காவல் புதிய கமிஷனர் அபின் தினேஷ் மோதக், விசாரணை நடத்தினார். கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ், லாரி ஓட்டுனர்களிடம் மாமூல் வாங்குவதாக கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்புராஜை பணியிட நீக்கம் செய்து, கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய, போக்குவரத்து போலீசார், இதேபோல் மாமூல் வசூலிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.இவர்கள் மீதும், தாம்பரம் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Sasikumar Yadhav
ஜூலை 22, 2024 06:23

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் டோல்கேட்டுகளை வந்து பார்க்கட்டும் ஏராளமான காவலர்கள் நின்று வாகனங்களை நிறுத்தி அடாவடி வசூல் செய்கிறார்கள்


ராஜமோகன்.V
ஜூலை 21, 2024 16:24

இதேபோல் தாம்பரம், குரோம்பேட்டை பிடித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்


அப்பாவி
ஜூலை 21, 2024 12:31

மாமூல் வசூலிக்கிறவன் திருட்டு திராவிடன். பணியிடை நீக்கம் செய்யறவன் வடக்கன். வெக்கக்கேடா இருக்கு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை