உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குருவிமலையில் மரக்கன்று நடும் விழா

குருவிமலையில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, குருவி மலையில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சத்யசாய் சேவா நிறுவனம், சர்வம் அறக்கட்டளை, களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்று நடும் விழா, ஊராட்சி தலைவர் நளினி தலைமையில் நேற்று நடந்தது.ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.சத்திய சேவா அமைப்பின் தலைவர் சங்கரநாராயணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.இதில், விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக விளையாட்டு பொருட்கள்மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், வேம்பு, அரசு, பூவரசு, மா, தேக்கு, பலா, பர்மா தேக்கு, புங்கன், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை