உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துாரில் அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் கடும் அவதி

குன்றத்துாரில் அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் கடும் அவதி

குன்றத்துார்:தார்ப்பாய் வைத்து மூடாமல், அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.குன்றத்துார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் அதிகம் நடக்கின்றன.இங்கு கட்டுமான பணிக்கு தேவையான ஜல்லி, மண், கற்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், தார்ப்பாய் கொண்டு மூடாமல் அதிவேகமாக செல்கின்றன. இதனால், லாரிகளில் இருந்து சிதறும் கற்கள் மற்றும் மண் சாலையில் விழுகின்றன.இவை, லாரியின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதுடன், விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, தார்ப்பாய் கொண்டு மூடாமல் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ