உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது

இரும்பு கம்பியால் தாக்கி மொபைல் பறித்த இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரின்சான், 27. ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.கடந்த 28ம் தேதி இரவு மாத்துார் -- மேட்டுப்பாளையம் சாலையில், அமிர்தா கேன்டீன் அருகே அமர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, 'ஸ்பிளண் டர்' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கிரின்சான் தலையில் அடித்து, அவரிடமிருந்து 'சாம்சங்' மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்த புகாரின்படி, ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இது தொடர்பாக, வாலாஜாபாத் புத்தகரத்தைச் சேர்ந்த செல்வகுமார், 22, சங்கரபுரத்தைச் சேர்ந்த தினேஷ், 23, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை