உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

மரத்தில் டூ -- வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கடேசன் மகன் சந்தோஷ், 25. பொறியியல் பட்டதாரியான இவர், ஏனாத்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த 4ம் தேதி, 'யமாஹா' இருசக்கர வாகனத்தில், ஏனாத்துார் சந்திப்பில், இரவு 9:00 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், புளிய மரத்தில் மோதி, நெற்றியில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, காரைப்பேட்டை தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்ற முன்தினம் அவர் இறந்தார். விபத்து குறித்து, காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை