உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

டூ - வீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:படூர் விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் போகன் மேத்யூ, 49; இவர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.வழக்கம் போல, நேற்று காலை, 'பிளாட்டினா' இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை சந்திப்பில் திரும்பியபோது, எதிர் திசையில், சென்னை நோக்கி வந்த கார், போகன் மேத்யூவின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் கிழே விழுந்தார்.அப்போது, காஞ்சிபுரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி சக்கரம், ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே போகன் மேத்யூ உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ