| ADDED : ஜூன் 01, 2024 03:59 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், செட்டியார்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னராசு, 23. பெயின்டிங் வேலை செய்து வந்த இவரும், காமராஜர் நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் நண்பர்கள்.இருவரும், 2023 அக்டோபர் மாதம் 18ம் தேதி, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன், 27, என்பவரை முன்விரோதம் காரணமாக அடிக்க முயன்றார்.அப்போது, மூன்று பேருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில், புருஷோத்தமன் அங்கிருந்த கல்லை எடுத்து, சின்னராசுவை நெற்றியிலும், தலையிலும் அடித்ததில் காயமடைந்தார்.இதுகுறித்து சின்னராசு கொடுத்த புகாரின்படி, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில், விசாரணை முடிந்து, தாக்குதலில் ஈடுபட்ட புருஷோத்தமனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் வாசுதேவன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.