மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
19 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சான்றிதழ்கள் பெறவும், நிலம் தொடர்பான பதிவேடு பணிகள்உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்ட டம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் கூரை விரிசலடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது.இதனால், ஜன்னல், மின்விசிறி உள்ளிட்டவை விழும் நிலையில் உள்ள தால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்துசெல்கின்றனர்.மேலும், மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் தண்ணீர் சொட்டுவதால், ஆவணங்களை பாதுகாப் பதில் சிரமம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.எனவே, பழுதடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
19 hour(s) ago