உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வி.ஏ.ஓ., கட்டடம் பாழ் ஒரத்தூர் மக்கள் அச்சம்

வி.ஏ.ஓ., கட்டடம் பாழ் ஒரத்தூர் மக்கள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு, சான்றிதழ்கள் பெறவும், நிலம் தொடர்பான பதிவேடு பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் கூரை விரிசலடைந்த, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது.இதனால், ஜன்னல், மின்விசிறி உள்ளிட்டவை விழும் நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.மேலும், மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் தண்ணீர் சொட்டுவதால், ஆவணங்கள் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.எனவே, பழுதடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ