உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜ பெருமாள் கோவில்

வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா சிறப்பு மலர்பாக்ஸ்.....1காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.இரண்டாம் நாள் உற்சவமான மே 21ம் தேதி காலை ஹம்ஸ வாகன உற்சவமும், மாலை சூரிய பிரபை உற்சவம் நடந்தது.மூன்றாம் நாள் பிரபல உற்சவமான கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, அனுமந்த வாகன உற்சவம் நடந்தது.நான்காம் நாள் உற்சவமான கடந்த 23ம் தேதி சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வரதாஜர் வீதியுலா வந்தார்.ோஐந்தாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் உலா வந்தார்.வஆறாம் நாள் உற்சமான நேற்று காலை தங்க சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் உலா வந்தார்.ிலஏழாம் நாள் பிரபல உற்சவமான இன்று காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், காந்தி சாலை, காமராஜர் சாலை, நான்கு ராஜ வீதி வழியாக பவனி வருகிறார்./////////கோவில் அமைப்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவல் வைணவ தலங்களில் முக்கியமானது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள், மூலிகை ஓவி யங்கள், கல்வெட்டுகள் உடையது. இக்கோவில் 28 ஏக்கர் 22 சென்ட் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது.காஞ்சிபுரத்தின் கிழக்கில் செங்கல்பட்டு செல்லும் சாலையில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ராஜகோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மேற்கு ராஜகோபுரம் 96 அடி உயரம், 92.5 அடி அகலம் கொண்டது. கிழக்கு ராஜகோபுரம் 125 அடி உயரம். 99 அடி அகலம் கொண்டது. சென்னையிலிருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள பகுதி விஷ்ணுகாஞ்சி என அழைக் கப்படுகிறது. இக்கோவிலில் அமைந்துள்ள ஏற்பட்டது.சிறிய மலை மீது பெருமாள் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இக்கோவில் தேவராஜஸ்வாமி கோவில் என்றும் பெருமாள் ஸ்ரீஅருளாளன், ஸ்ரீவரதராஜன், ஸ்ரீதேவாதிராஜன் என அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் அந்தப் பர்வதசிகரத்தில் பெருமாளை திக்கஜங்கள் ஆராதித்தது. எனவே அதற்கு ஹஸ்நிகிரி (அத்திகிரி யானைமலை) என்ற பெயர் நகர் முழுவதும் கோவிலுக்கு மேற்புறம் இருக்கிறது. ஸ்ரீதாயார்:ஸ்ரீபர்கவி, ஸ்ரீமகாதேவி என அழைக்கப்படும் ஸ்ரீபெருந்தேவி தாயார் பங்குனி மாதம் உத்திர திருநட்சத்திரத்தில் ப்ருகவின் வேள்வியில் அவதரித்தவர். ஸ்ரீதேவராஜனை அர்ச்சித்து திருமணம் செய்து கொண்டவர். ஸ்ரீபெருந்தேவி தாயார், ஸ்ரீவரதராஜப் பெருமாள் திவ்ய தம்பதியர் என வணங்கப்படுகின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒரு ஏழையின் திருமணத்திற்காக இத்தாயாரை துதி செய்து தங்க மழை பொழிய செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ