உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு 21ல் கோடை உற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு ஆண்டுக்கான உற்சவம், வரும் 21ம் தேதி இரவு வரசித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்குகிறது.இதில், 2ம் நாள் உற்சவமான 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், 23ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு வர்ணிப்புடன், அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.வரும் 24ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலுடன் கோடை உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி