உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு

வாகனம் மோதி மின்கம்பம் முறிவு மின் இணைப்பு துண்டிப்பு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - ஒரகடம் சாலையோரம், வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டை பகுதியில், உயர் அழுத்த மின்வழித் தடம் செல்கிறது. இந்த வழித்தடத்தில், மின்மாற்றி மற்றும் குடியிருப்பு மின் இணைப்புகள் செல்கின்றன.நேற்று அதிகாலை, 12:30 மணி அளவில், அடையாள எண் தெரியாத லாரி மோதியதில், மின் கம்பம் முறிவடைந்தது.இதனால், ஆறுமுகப்பேட்டை பகுதி மற்றும் வாலாஜாபாத்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், மின் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியினர் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, வாலாஜாபாத் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடையாள எண் தெரியாத லாரி மோதியதில், இரும்பிலான மின்கம்பம் முறிவு ஏற்பட்டு உள்ளது. தற்காலிகமாக மின் இணைப்பு துண்டித்து உள்ளோம். 'ஓரிரு தினங்களில் சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் மாற்று ஏற்பாடு செய்து மின் சப்ளை வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ