உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அம்பத்துாரில் காதல் ஜோடியிடம் நகை பறித்த போலீசார் யார்?

அம்பத்துாரில் காதல் ஜோடியிடம் நகை பறித்த போலீசார் யார்?

சென்னை:அம்பத்துார், புழல்- - தாம்பரம் புறவழிச்சாலையில், நேற்று முன்தினம் மாலை 7:00 மணி அளவில், சொகுசு கார் நின்றிருந்தது. அப்போது, 'போலீஸ்' ஸ்டிக்கர் ஒட்டிய இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர், காரின் கதவில் தட்டி, உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.கதவை திறந்தவரிடம், அம்பத்துார் தொழிற்பேட்டை போலீஸ் எனக் கூறியபடி, 'இங்கு என்ன செய்கிறீர்கள்' என விசாரித்துள்ளனர். அவர்கள், சென்னையில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படித்து வருவதாக கூறியிருக்கின்றனர். அதை தொடர்ந்து, அவர்களது அடையாள அட்டையை வாங்கி பார்த்து, கல்லுாரி மாணவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.அதன் பின், மொபைல் போனில் உங்கள் பெற்றோரை அழையுங்கள், அவர்களிடமும் விசாரிக்க வேண்டும் எனக்கூறி உள்ளனர். அப்போது, காரில் இருந்த காதல் ஜோடிகள் தயங்கி, பெற்றோருக்கு தெரிய வேண்டாம் என, கெஞ்சி இருக்கின்றனர். இதனால், அவர்களை மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த செயின் உட்பட 10 சவரன் நகையை பறித்து சென்றனர்.அவர்கள் மீது சந்தேகமடைந்த கல்லுாரி மாணவர், அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ