உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கத்திரி வெயில் வெப்பத்தை தணிக்க அக்னீஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம்

கத்திரி வெயில் வெப்பத்தை தணிக்க அக்னீஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம்

காஞ்சிபுரம்:அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கியது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக 43 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது.கத்திரி வெயிலின் வெப்பத்தை தனித்து, மழை பெய்ய வேண்டி காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூரில் உள்ள காமாட்சி உடனுறை அக்னீஸ்வரர் கோவிலில் 108 இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது.இதில், களக்காட்டூர் சந்திரமேக தடாகம் என்ற ஏரிக்கரையின் மேல், ஊரணியாழ்வார் என அழைக்கப்படும் காமாட்சி உடனுறை அக்னீஸ்வரருக்கு, சிவ வாத்தியங்கள் முழங்க 108 இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அக்னீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை