உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேலைவாய்ப்பு முகாம் 221 பேர் பங்கேற்பு

வேலைவாய்ப்பு முகாம் 221 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 31 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு முடித்தவர்கள், பத்தாவது, டிகிரி, டிப்ளமோ படித்த 221 பேர் பங்கேற்றனர்.இதில், 60 பேர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 80 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குனர் அருணகிரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி