உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3 பள்ளிகளை சீரமைக்க ரூ.32 லட்சம் ஒதுக்கீடு

3 பள்ளிகளை சீரமைக்க ரூ.32 லட்சம் ஒதுக்கீடு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், 40க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன.இதில், சுற்றுச்சுவர், பராமரிப்பு, குடிநீர் என பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கின்றன.அவ்வாறு, அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, பள்ளி மேம்பாட்டு மானிய நிதி வாயிலாக, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது, பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பழுது நீக்க 15 லட்சம் ரூபாயும், ஆசிரியர் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட 10 லட்சம் ரூபாயும், ஒக்கப்பிறந்தான் குளத்தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பழுது நீக்க 7 லட்சம் ரூபாய் என, 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்ப பணிகள் விரைவில் துவங்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி