உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் 539 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் 539 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம் என இரு சட்டசபை தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு என நான்கு தொகுதிகள் என, மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் வருகின்றன.லோக்சபா தொகுதியில் மொத்தம் 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில், 1,417 ஓட்டுச்சாவடிகளில், 539 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடியில் தேர்தல் நாளன்று பணியாற்ற, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக, 6,708 பேர் ஈடுபட உள்ளனர். தேர்தலுக்கு, 9,780 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர்.வேட்பாளர்கள் வாகன அனுமதி, பொதுக்கூட்ட அனுமதி போன்ற ஆறு வகையான அனுமதி பெற, சுவிதா எனும் இணைய வழியில் அனுமதி பெறும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல, 'சி - விஜில்' எனும் மொபைல் ஆப் மூலம், தேர்தல் விதிமீறல்களை புகார் அளிக்கலாம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல் புகார்களை, காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா எண்ணான 1800 425 7087 மற்றும் 044 -1950 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை