உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டிலிருந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

வீட்டிலிருந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

குன்றத்துார், தாம்பரம் அருகே, வரதராஜபுரம், ராயப்பா நகரில் வசிப்பவர் நாகம்மாள், 68. நேற்று, தன் மகளுடன் வீட்டில் இருந்தார்.அப்போது, பைக்கில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதாக கூறி, வீட்டின் உள்ளே நுழைந்தனர்.அப்போது, நாகம்மாள் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர்கள்பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்த புகாரை அடுத்து, சோமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை