உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு

சென்னை, : வியாசர்பாடி, பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 51; தி.நகரில் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிகிறார்.இவரது மனைவி செல்வி; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.மாலையில் மாரிமுத்துவீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 57 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ