உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்

மின் ஒயரில் மண்டி கிடக்கும் புதர்; குடியிருப்பு பகுதியில் அச்சம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கழுநீரோடை ஜவஹர்லால் நேரு மார்க்கெட் எதிரில் உள்ள தர்கா சந்து பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மற்றும் சர்வீஸ் ஒயரில், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன.இதனால், பலத்த காற்றடிக்கும்போது, மின் ஒயரில் இருந்து தீப்பொறி பறப்பதால், அவ்வழியாக செல்ல அச்சமாக உள்ளது என, பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், இப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின் ஒயரில் புதர்போல மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி